எரிபொருள் தட்டுப்பாடு - வீட்டிலேயே குழந்தையை பிரசவித்த தாய்
சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் இன்மையினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், நிக்கவரெட்டிய பகுதியில் தாய் ஒருவர், தமது வீட்டிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார்.
நிக்கவரெட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகாலை 5.10 அளவில் குறித்த தாய், தமது மூன்றாவது குழந்தையை பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சத்திரசிகிச்சை முறையில் குழந்தையை பிரசுவிப்பதற்கு திகதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு முன்னதாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் நிக்கவரெட்டிய - திவுலேகொட குடும்ப நல அதிகாரிக்கு தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், தமது கணவருடன், குறித்த வீட்டிற்கு சென்ற குடும்ப நல அதிகாரி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில், குடும்ப நல உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிளில் குறைந்தளவான எரிபொருளே காணப்பட்டதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தாய் மற்றும் சேய் ஆகியோர் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.