20 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

 202 ரூபாயாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 183 ரூபாய் ஆகும். 

ஒக்டோபர் 1, 2024 - 02:31
ஒக்டோபர் 1, 2024 - 09:20
20 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்ட எரிபொருட்களின் விலை

இன்று நள்ளிரவு முதல் அமலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைப்பதாக அறிவித்துள்ளது. 

அதன்படி, 332 ரூபாயாக காணப்பட்ட 92 ரக  ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 21  ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாயாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல்  லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எ

307  ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 283 ரூபாயாகும்.

352 ரூபாயாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 319  ரூபாவாகும்.

 202 ரூபாயாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 183 ரூபாய் ஆகும். 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்த அறிவிப்புக்குப் பின்னர் ஐ.ஓ.சி  மற்றும் சினோபெக் ஆகியன தமது எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!