எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு - வெளியான தகவல்
எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தையின் எரிபொருள் தேவைக்கு அமைய எமது எரிபொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியுடன், சிறு வர்த்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சி கண்டன.
அனைத்து நுண்தொழில்துறைகளும் முற்றிலும் நட்டமடைந்தன. வங்கிக் கட்டமைப்பும் பாதிப்புக்குள்ளானது.
சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது.
வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.