இன்றும் ஹட்டனில் எரிபொருளுக்கு வரிசை
ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.

ஹட்டன் நகரில் இன்று அதிகாலை தொடக்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நீண்ட வாகன வரிசைகள் காணப்பட்டன.
ஹட்டனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று (17) போதியளவு எரிபொருள் தொகை கிடைத்துள்ள நிலையில், எரிபொருளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்குமாறு, எரிபொருள் கூட்டுதாபனம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் எரிபொருள் நிலைய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் மீண்டும் எத்தனை நாட்களுக்குப் பிறகு தமது எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படும் என்பது தமக்கே தெரியாதென்றும் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.