புதிய பதவிக்காலத்தில் முதல் விஜயம்; கொழும்பை வந்தடைந்தார் ஜெயசங்கர் 

அவரை, வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமன் ஆகியோர் வரவேற்றனர். 

ஜுன் 20, 2024 - 13:55
ஜுன் 20, 2024 - 13:56
புதிய பதவிக்காலத்தில் முதல் விஜயம்; கொழும்பை வந்தடைந்தார் ஜெயசங்கர் 

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், சற்றுமுன்னர் கொழும்பை வந்தடைந்தார்.

அவரை, வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமன் ஆகியோர் வரவேற்றனர். 

இது தொடர்பில் எஸ்.ஜெயசங்கர் தனது X தளத்தில், “புதிய பதவிக்காலத்தில் எனது முதல் விஜயமாக கொழும்பை வந்தடைந்துள்ளேன். இதயபூர்வமான வரவேற்புக்காக இராஜாங்க அமைச்சர்  மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு நன்றி. தலைமைத்துவத்துடனான சந்திப்புகளை மேற்கொள்ள ஆவலுடன் உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக்கான விஜயமொன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிடப்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

https://x.com/DrSJaishankar/status/1803650216748556748

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!