குணசேகரன் கடைசியான பேசிய வசனத்தை வெளியிட்ட சன் டிவி

எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக வலம்வந்த குணசேகரன் கடைசியாக பேசிய வசனத்தை The Last Voice of Adhi Gunesekaran என்ற தலைப்பில் காணொளியான சன் டிவி வெளியிட்டுள்ளது.

செப்டெம்பர் 13, 2023 - 20:04
குணசேகரன் கடைசியான பேசிய வசனத்தை வெளியிட்ட சன் டிவி

எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக வலம்வந்த குணசேகரன் கடைசியாக பேசிய வசனத்தை The Last Voice of Adhi Gunesekaran என்ற தலைப்பில் காணொளியான சன் டிவி வெளியிட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய குணசேகரன், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.

ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்த குணசேகரனது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.

சமீபத்தில் இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

குணசேகரன் நடித்த காட்சி இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், அவர் கடைசியாக பேசிய டப்பிங் காணொளி இதுதான் என்று சன்டிவி தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில் குணசேகரன், கரிகாலா எனக்கும் சந்தேகமா தான்டா இருக்கு என்று சொல்லிக்கொண்டு, அம்மாவிடம் இவங்க முன்னாடி எல்லாம் புள்ளையை விட்டுக் கொடுக்கிறது உனக்கு வேலையா போச்சு என்று புலம்புகிறார்.

அவரது இந்த குரலைக் கேட்ட ரசிகர்கள் வருத்தத்துடன், கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!