முட்டை விலை மீண்டும் அதிகரித்தது!
முன்னதாக, வெள்ளை முட்டையை50 ரூபாய்க்கும், சிவப்பு முட்டையை 52 ரூபாய்க்கும் விற்பனை செய்யுமாறு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று முன்தினம் சொன்னது.
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட் பிறக்கவுள்ளதன் காரணமாக தற்போது, சந்தையில் முட்டைக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதுடன், சந்தையில் கேக் உள்ளிட்ட முட்டை பயன்படுத்தப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரித்து உள்ளது.
எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில் முட்டையின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என முன்னதாக தெரிவிக்கப்பட்ட போதும், தற்போது விலை அதிகரிப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.