சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் உள்நாட்டு முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 12, 2024 - 10:50
சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில் உள்நாட்டு முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சற்று விலை குறைந்து வந்த உள்ளூர் முட்டை விலை தற்போது 50 ரூபாயா அதிகரித்துள்ளதாக கூறிய அவர்,  முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளமையே விலை அதிகரிப்புக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு முட்டையின் மொத்த விலை 50 ரூபாயாகவும், சில்லறை விலை 55 ரூபாயாகவும் உள்ளதுடன், இடைத்தரகர்கள் விலையை மேலும் உயர்த்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு முட்டையின் விலை உயர்த்தப்பட்டால் மீண்டும் இந்தியாவில் இருந்து, முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.     

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!