15 மில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்திய முன்னாள் ஜனாதிபதி 

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜுலை 11, 2023 - 17:14
15 மில்லியன் ரூபாயை இழப்பீடாக செலுத்திய முன்னாள் ஜனாதிபதி 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த  உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில்   54,285/- ரூபாயையும் பெறுவதாக அந்த பிரேரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாய் இழப்பீட்டு தொகையில், 15 மில்லியன் ரூபாயை உயிர்த்த ஞாயிறு  தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியத்திற்கு வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எஞ்சியுள்ள தொகையை  2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை 10 தவணைகளில் வருடாந்தம் 8.5 மில்லியன் ரூபாய் வீதம் செலுத்த அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

(Adaderana English)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!