மீண்டும் வழமைக்கு திரும்பியது டுப்ளிகேஷன் வீதி
கொள்ளுப்பிட்டி பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டுப்ளிகேஷன் வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

கொள்ளுப்பிட்டி பஸ் மீது முறிந்து வீழ்ந்த மரம் அங்கிருந்து அகற்றப்பட்டதை அடுத்து, டுப்ளிகேஷன் வீதி போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தையடுத்து, டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
இதனையடுத்த, அந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
கொழும்பில் சோகம்: பஸ் மீது மரம் விழந்து ஐவர் உயிரிழப்பு
முன்னதாக, இன்று (06) காலை கொள்ளுப்பிட்டி, லிபட்டி சந்திக்கு அருகில் பாரிய மரம் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரில் ஐவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த ஏனையோருக்கு அவசர விபத்துப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி