திடீரென வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (16) வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், டொலரின் பெறுமதியில் சற்று உயர்வு பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (16) வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், டொலரின் பெறுமதியில் சற்று உயர்வு பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து உயர்வடைந்து வந்த நிலையில் இன்று திடீரென ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளநாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.54 ரூபாயாகவும், கொள்வனவு விலை 294.20 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனடா டொலரின் விற்பனை விலை 221.33 ரூபாயாகவும், கொள்வனவு விலை 211.66 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 323.89 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி 310.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை பெறுமதி 378.87 ரூபாயாகவும் கொள்வனவு பெறுமதி 363.79 ரூபாயாகவும் காணப்படுகின்றது.