டொலரின் பெறுமதியில் தொடர்ந்து வீழ்ச்சி - ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கனேடிய டொலரின் விற்பனை விலை 227.53 ரூபாயாகவும், கொள்வனவு விலை 217.80 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று(26) மேலும் உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர்ந்தம் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.33 ரூபாயாகவும், கொள்வனவு விலை 297.63 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை விலை 227.53 ரூபாயாகவும், கொள்வனவு விலை 217.80 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.61 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 321.10 ரூபாயாகவும் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.84 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 374.78 ரூபாயாகவும் உள்ளது.
கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி குறைவடைந்து இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.