இலங்கை ரூபாயின் பெறுமதியில் மீண்டும் உயர்வு
இலங்கை ரூபாயின் பெறுமதி: வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி: செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (ஜூலை 10) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 299.79 ரூபாயில் இருந்து 299.26 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 309.12 ரூபாயில் இருந்து 308.50 ரூபாய் ஆகவும் குறைவடைந்துள்ளது.
அத்துடன், வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க | இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவாகியுள்ள மாற்றம்!