இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி: புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஆகஸ்ட் 01) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.

ஆகஸ்ட் 1, 2024 - 19:15
இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஆகஸ்ட் 01) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் நிலையானதாக உள்ளது.

செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 296.50 ரூபாயாகவும் விற்பனை பெறுமதி 306 ரூபாயாகவும் உள்ளது.

NDB வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 295.60 ரூபாயிலிருந்து 295.50 ரூபாயாகவும், விற்பனை விலை 306.60 ரூபாயிலிருந்து  306.50 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 297.14  ரூபாயிலிருந்து 2967.89 ரூபாயாகவும், விற்பனை விலை 307.80 ரூபாயிலிருந்து  307.54 ரூபாயாகவும் மாற்றமடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில்,  அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 297.67 ரூபாயிலிருந்து  296.69 ரூபாயாகவும், விற்பனை விலை 306.50 ரூபாயாகவும் மாற்றமடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் ரூ. 298 மற்றும் ரூ. 307 ஆக காணப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!