மாரடைப்பால் உயிரிழந்த பிரபல தமிழ்பட இயக்குநர் : திரைத்துறையினர் அதிர்ச்சி
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கார்த்தி நடித்த 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள், தற்போது அவர் 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் யோகிபாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கியுள்ளார்.
'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'படத்தின் பிரெஸ் மீட் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதில் கலந்துகொள்ள வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
அதனையடுத்து, உடனடியாக கொளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், வரும்போதே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .
சங்கர் தயாளின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.