இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று நேற்று (27) மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் வழங்கிய தொலைபேசி அழைப்பின் பேரில், பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, தேயிலை புதருக்கு அருகாமையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.