கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை
காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது.

மொனராகலை - பதல்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நேற்றிரவு இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தர்மபால விஜயசிறி (வயது 41), ரோஹித குணரட்ன (வயது 38) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.