திருந்தாத ஜடேஜா.. உண்மையாவே ஃபினிஷர் தானா.. இந்திய அணியில் ஃபார்மில் இல்லாத ஒரே வீரர்!

உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Sep 28, 2023 - 07:31
திருந்தாத ஜடேஜா.. உண்மையாவே ஃபினிஷர் தானா.. இந்திய அணியில் ஃபார்மில் இல்லாத ஒரே வீரர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டாகியது.

உலகக்கோப்பை நெருங்கும் சூழலில் இந்திய அணியின் தோல்வி பற்றி பெரியளவில் கவலை கொள்ள தேவையில்லை என்றாலும், வீரர்களின் செயல்பாடுகள் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே சோகமடைய செய்துள்ளது. பந்துவீச்சில் ஃபார்முக்கு திரும்பி இருந்தாலும், பேட்டிங்கில் ஜடேஜாவின் ஆட்டம் மோசமாகவே உள்ளது.

இந்தியா படுதோல்வி அடையக் காரணமே ரோஹித் தான்..  ரசிகர்கள் போட்ட லிஸ்ட்!

இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸ் உட்பட 35 ரன்கள் சேர்த்திருக்கிறார். இந்த ரன்கள் போதுமானது என்றாலும், ஜடேஜாவின் கள செயல்பாடுகள் இன்னும் மாறவில்லை. 

வழக்கமாக டெய்லண்டர்களுடன் விளையாடும் ஃபினிஷர்கள், டெய்லண்டர்களுக்கு அதிக பந்துகளை கொடுக்காமல் தாங்களே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்வார்கள்.

அதேபோல் விளையாடும் பந்துகளில் எல்லாம் பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்துவார்கள். தோனி, பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இத்தனை ஆண்டுகளாக அப்படிதான் விளையாடி வந்திருக்கிறார்கள். 

ஆனால் ஜடேஜாவோ டெய்லண்டர்களுடன் விளையாடும் போது முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை பவுலர்களிடம் வழங்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.

இந்த ஆட்டத்திலும் குல்தீப் யாதவ் 12 பந்துகளையும், பும்ரா 11 பந்துகளயும், சிராஜ் 8 பந்துகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. இதுபோல் பொறுப்பின்றி ஜடேஜா விளையாடி வருவதால், எதிர்முனையில் கட்டாயம் பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

இதனால் தோனி, பென் ஸ்டோக்ஸ் போல் ஒற்றை ஆளாக ஜடேஜாவால் எந்தவொரு ஆட்டத்தை மாற்ற முடியாது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.