தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 5, 2026 - 17:15
தேங்காய் எண்ணெய் விலை உயர்வு – அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்  என கோரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் தேங்காய் எண்ணெயின் விலை சுமார் ரூ.100 உயர்ந்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி (NCF) தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். டெய்லி மிரருக்கு கருத்து வெளியிடுகையில், தற்போது ஒரு போத்தல் தேங்காய் எண்ணெயின் விலை ரூ.1,320 முதல் ரூ.1,420 வரை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பத், தேங்காய்களின் சந்தை விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அது எண்ணெய் விலையில் பிரதிபலித்துள்ளதாக ஒப்புக்கொண்டார். ஆனால், "தாவர எண்ணெய்" (vegetable oil) விலையில் ஏற்பட்ட உயர்வு குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

"தாவர எண்ணெய் என்று அழைக்கப்படுவது எந்தக் காய்கறியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது? இந்த விலை உயர்வுக்கான உண்மையான காரணத்தை வர்த்தக அமைச்சகம் பொதுமக்களிடம் உடனடியாக விளக்க வேண்டும்" என்று சவால் விடுத்தார் அசேல சம்பத்.

தேங்காய் எண்ணெய் இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் அடிப்படை உணவுப் பொருளாக இருப்பதால், இந்த விலை உயர்வு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்று  அவர் எச்சரித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!