கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை இன்று(12) முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 12, 2023 - 19:59
கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிப்பு... வெளியான அறிவிப்பு

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை இன்று(12) முதல் அதிகரிக்க மொத்த வியாபாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,200 ரூபாய்வரை  விற்கப்பட்ட நிலையில் இன்று முதல் அது 1,250 ரூபாய்க்கு உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல வியாபாரிகள் நேற்றைய தினமே விலையை அதிகரித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், முட்டையின் விலையும் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!