தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது!
தேர்தலில் வாக்களிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

`தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரசாரத்துக்கு அனுமதி இல்லை. மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற வேண்டும்' என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சத்யபிரத சாஹு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
தேர்தலில் வாக்களிப்பதற்காக, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இன்று (17) மற்றும் நாளை (18) சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2 நாள்களுக்கு 3 ஆயிரத்து 60 பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக்கட்ட பிரசாரம் இன்று
இன்றுடன் பிரசாரம் நிறைவடைவதால் அனைத்து தலைவர்களும், இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்ந்துவிடும்.
புதுச்சேரியிலும் இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது. எனவே அங்கும் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்த 102 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனிடையே தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் இன்று பிரசாரம் நிறைவடைவதால் தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளநிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.