தவறான உறவு - மாமியாரை திருமணம் செய்த மருமகன்
இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர்.

பீகாரில் சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து பெண்வீட்டில் வசித்து வந்த நிலையில், சிக்கந்தரின் மனைவி இறந்தவிட்டார்.
எனினும், சிக்கந்தர் அங்கேயே தொடர்ந்து தங்கி இருந்து தன் மாமியாருடன் நெருங்கி பழகிவந்த நிலையில் இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால், இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர்.
அதில் மாமியாருடன் அந்த இளைஞருடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. இதனையடுத்து, அங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த செய்தி வைரலான நிலையில், இந்திய சமூகத்தின் நிலைமை கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சீர்கெட்டு வருகிறது என்று வலைத்தளவாசிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.