உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு: தமீம் இக்பால் இல்லை!

உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி: 2020-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பெற்ற தௌஹித் ஹிருதாய், ஷொரிஃபுல் இஸ்லாம், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன் ஆகியோர் இந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

செப்டெம்பர் 27, 2023 - 10:03
உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு: தமீம் இக்பால் இல்லை!

உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி

உலகக் கோப்பைக்கான 15 பேர்கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நட்சத்திர பேட்டர் தமீம் இக்பால் உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெறவில்லை. 

கடந்த ஜூலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

காயம் காரணமாக கேப்டன் பொறுப்பைத் துறந்த அவர், ஆசியக் கோப்பைப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இருப்பினும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தமீம் பங்கேற்றார். 

மீண்டும் முதுகு வலியால் தவித்த அவருக்கு அந்தத் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டது. இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அணியிலும் அவர் இடம்பெறாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி உலககோப்பை இலங்கை அணி அறிவிப்பு.. தோனியின் செல்லப் பிள்ளைக்கு வாய்ப்பு

காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்காத எபாதத் ஹொசைன் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெறவில்லை. ஷகிப் அல் ஹசன் தலைமையிலான உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணியில் பேட்டிங் பொறுப்பை முஷ்ஃபிகுர் ரஹீம், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ் ஆகியோர் கவனித்துக்கொள்கிறார்கள்.

எபாதத் ஹொசைன் இடம்பெறாத நிலையில் டஸ்கின் அஹமது, முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஷொரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் மற்றும் தன்ஸின் ஹசன் ஆகியோரிடம் வேகப்பந்துவீச்சுப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2020-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணியில் இடம்பெற்ற தௌஹித் ஹிருதாய், ஷொரிஃபுல் இஸ்லாம், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன் ஆகியோர் இந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

பங்களாதேஷ் உலகக் கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 7-ல் தரம்சாலாவில் நடைபெறுகிறது. அதற்கு முன்பு இலங்கை மற்றும் இங்கிலாந்து உடன் பயிற்சி ஆட்டங்களிலும் வங்கதேசம் விளையாடவுள்ளது.

உலகக் கோப்பைக்கான பங்களாதேஷ் அணி

ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தௌஹித் ஹிருதாய், மெஹதி ஹசன் மிராஸ், டஸ்கின் அஹமது, முஸ்தபிஸுர் ரஹ்மான், ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அஹமது, மெஹதி ஹாசன், தன்ஸித் ஹசன், தன்ஸிம் ஹசன், மஹ்மதுல்லா.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!