ஐசிசி உலககோப்பை இலங்கை அணி அறிவிப்பு.. தோனியின் செல்லப் பிள்ளைக்கு வாய்ப்பு
உலககோப்பைக்கான இலங்கை அணி:

இலங்கை அணி
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 28ஆம் திகதிக்குள் அனைத்து அணியினரும் தங்களுடைய வீரர்களை அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ள நிலையில் கடைசி நேரத்தில் இலங்கை அணி தற்போது 15 வீரர்களை உலககோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
வீரர்கள் சிலர் காயமடைந்து இருந்ததால் அவர்கள் மீண்டும் வருவார்களா என்று காத்திருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டிருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி கேப்டனாக சானக்கவே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேகப்பந்துவீச்சாளர் தில்சான் மதுசங்க, லகிரு குமார ஆகியோர் உலகக் கோப்பை தொடர்கான அணியின் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோன்று பிரமோத் மதுசான், பினோர பெர்னான்டோ, சமீகா கருனரத்ன ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் சமீர காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆர் சி பி அணியின் இடம்பெற்ற ஹசரங்க உலகக் கோப்பை அணியில் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
இந்த நிலையில் உலககோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால் ஹசரங்க முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் சேர்க்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுபோன்று ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் காயம் அடைந்த சிஎஸ்கே வீரர் மகேஷ் தீக்ஷனா முழு உடல் தகுதி எட்டியதால் அவருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோன்று தோனியின் செல்லப் பிள்ளையான சிஎஸ்கே மதீஷ பதிரண முதல் முறையாக உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இதே போன்று குசல் பெரேரா விக்கெட் கீப்பராக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைத்தவிர ஆசிய கோப்பையில் விளையாடிய அனைத்து வீரர்களும் உலக கோப்பை அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இலங்கை அணி வரும் 29ஆம் திகதி முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேசத்தையும் வரும் அக்டோபர் திகதி தேதி இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.
உலககோப்பைக்கான இலங்கை அணி
- தசுன் ஷானக (கேப்டன்)
- குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்)
- பெத்தும் நிஸ்ஸங்க
- குசல் ஜனித் பெரேரா
- திமுத் கருணாரத்ன
- சரித் அசலங்க
- தனஞ்சய டி சில்வா
- சதீர சமரவிக்ரம
- வனிந்து ஹசரங்க (உடல் தகுதியின் அடிப்படையில்)
- மகேஷ் தீக்ஷனா (உடல் தகுதியின் அடிப்படையில்)
- துனித் வெள்ளாலகே
- கசுன் ராஜித
- தில்ஷன் மதுஷங்க (உடல் தகுதியின் அடிப்படையில்)
- மதீஷ பத்திரன
- லஹிரு குமார