ரசிகர்களை கவர்வது சவாலான விடயம் - நடிகை தமன்னா
நடிகை தமன்னா: ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.

நடிகை தமன்னா சினிமா அனுபவங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், "சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதற்காக 100 சதவீதம் உழைத்தேன். இப்போது சாதித்து விட்டேன்.
ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.
அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.
ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.