ஆசிய கோப்பை 2023 - பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆசிய கோப்பை 2023: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது.
மழை ஆபத்து இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் போட்டியை பாதிக்கும் அளவு மழை இருக்காது என இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்திய அணி பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்திய அணியில் தற்போது காயத்தில் இருந்து நட்சத்திர வீரர்கள் திரும்பி இருப்பதால் அணியின் பல மாற்றங்கள் இருக்கும்.
எனினும் இந்தியாவின் முதல் மூன்று இடத்தில் எந்த குழப்பமும் இருக்காது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கில் மற்றும் மூன்றாவது வீரராக விராட் கோலி களமிறங்க உள்ளனர்.
நான்காவது வீரராக இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க போகிறார். ஐந்தாவது இடத்தில் தான் தற்போது பெரிய குழப்பம் இருக்கிறது.
கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனை நடு வரிசையில் பயன்படுத்தலாமா இல்லை சஞ்சு சம்சனை பயன்படுத்திக் கொள்ளலாமா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
எனினும் மும்பை கோட்டா படி இஷான் கிஷனுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.
திகிலை கிளப்பும் பாகிஸ்தான் வேகம்.... எதிராக இந்திய வீரர்கள் அடித்த ரன்கள்
ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கும் ,ஏழாவது வீரராக ஜடேஜாவுக்கும் அதிக வாய்ப்பு உள்ளது. எட்டாவது வீரராக சர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
இரண்டு வேகப்பந்துவீச்சாளராக பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 11 வது வீரராக குல்தீப் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கும்.
ஒருவேளை சூரியகுமார் யாதவை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு சூரியகுமார் யாதவுக்கு இடம் கிடைக்கலாம்.