ஆசிய கோப்பை 2023 - திகிலை கிளப்பும் பாகிஸ்தான் வேகம்.... எதிராக இந்திய வீரர்கள் அடித்த ரன்கள்

ஆசிய கோப்பை 2023: உலக கிரிக்கெட்டில் தற்போது பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு காரணம் அந்த அணியில் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு தான்.

செப்டெம்பர் 2, 2023 - 10:52
செப்டெம்பர் 2, 2023 - 10:56
ஆசிய கோப்பை 2023 - திகிலை கிளப்பும் பாகிஸ்தான் வேகம்.... எதிராக இந்திய வீரர்கள் அடித்த ரன்கள்

ஆசிய கோப்பை 2023: உலக கிரிக்கெட்டில் தற்போது பாகிஸ்தான் அணி நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு காரணம் அந்த அணியில் பலம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு தான்.

குறிப்பாக பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடியை எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் கடுமையாக தடுமாறி வருகிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் சாஹின் அப்ரிடி இந்தியாவில் 3 முக்கிய விக்கெட் வீழ்த்தி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பாகிஸ்தானுக்கு பெற்று தந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனை ஏற்கனவே அறிவித்து விட்டது.

இதில் ஷாகின் அப்ரிடி, ஹரிஷ் ரவுப்,நசீம் ஷா ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். 

இந்த நிலையில் இந்த மூன்று வீரர்களுக்கு எதிராக இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் அடித்த ரன்கள் எவ்வளவு? எத்தனை முறை ஆட்டம் இழந்து இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்த மூன்று பவுலர்களையும் எதிர்கொண்ட ரோகித் சர்மா வெறும் 47 ரன்களை தான் அடித்திருக்கிறார். இதில் மூன்று முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். கே எல் ராகுல் அடித்த ரன்களோ வெறும் 22 தான். 

ஆசிய கோப்பை 2023 - விராட் கோலியை சந்தித்த பாகிஸ்தான் வீரர்கள்.. பயிற்சியின் போது நெகிழ்ச்சி சம்பவம்!

அவரும் மூன்று முறை இந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆட்டம் இழந்து இருக்கிறார். அதிரடி வீரராக கருதப்படும் சூரியகுமார் யாதவ் 22 ரன்களை அடித்து இந்த பவுலர்களுக்கு எதிராக இரண்டு முறை அவுட் ஆகி இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் எடுத்து ஒரு முறையும், ஜடேஜா இந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 19 ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழக்காமல் இருந்திருக்கிறார். 

இந்திய அணி பேட்ஸ்மேன்களே அதிகபட்சமாக விராட் கோலி தான் இந்த மூன்று பவுலர்களையும் எதிர்கொண்டு 107 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் அவர் ஒருமுறைதான் ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, எங்கள் அணியில் ஷாகின் அப்ரிடி போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர் இல்லை. இருப்பினும் எங்களிடம் யார் இருக்கிறார்களோ அவர்களை வைத்து தான் பயிற்சி முகாமில் பந்துகளை எதிர்கொண்டோம். 

எங்களுக்கு பந்து வீசியவர்களும் திறமையான வீரர்கள் தான். ஷாகின் அப்ரிடியை எதிர்கொள்ள நல்ல பயிற்சி எடுத்திருக்கிறோம் என்று ரோகித் சர்மா கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!