யாழில் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான வெற்றி வழி அறிவிப்பு

இந்த மாநாட்ட, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), வட மாகாண தகவல் தொழில்நுட்ப வாரியம் (NCIT) மற்றும் USAID அமைப்பின் "Catalyze" Private Sector Development (PSD) செயற்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

ஆகஸ்ட் 14, 2023 - 18:08
யாழில் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான வெற்றி வழி அறிவிப்பு

இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 மாகாண தகவல் தொழில்நுட்ப மாநாடு யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. 

இந்த மாநாட்ட, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), வட மாகாண தகவல் தொழில்நுட்ப வாரியம் (NCIT) மற்றும் USAID அமைப்பின் "Catalyze" Private Sector Development (PSD) செயற்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

இங்கு, வட மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளை அணுகுவது மற்றும் சவால்களை சமாளிப்பது குறித்து நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களால் அந்த தொழிலதிபர்களுக்கு விளக்கப்பட்டது.

டிஜிட்டல் ஊடக நிர்வாகம், UI/UX, தயாரிப்பு பொறியியல், கொள்முதல் செயல்முறை, தகவல் தொழில்நுட்ப விலை நிர்ணயம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான புதிய கட்டளைகள், விதிகள், ஒப்பந்தங்கள் போன்ற பகுதிகள் குறித்தும் இங்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

சர்வதேச மட்டத்தில் இலங்கையில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இலங்கையர்களின் அனுபவங்கள், தொழில்முறை திறன்கள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்ளவும் இங்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அந்த மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் உட்பட இளைஞர் சமூகத்தினருக்கான தகவல் தொழில்நுட்ப தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சியும் இங்கு இடம்பெற்றதுடன் அதில் அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் தனியார் துறை வங்கிகளின் அதிகாரிகளினால், தகவல் தொழில்நுட்பத் துறையினர் வங்கித் துறையினால் தமது தொழில்துறைக்குக் கிடைக்கும் நன்மைகள், நிதிப் பாதுகாப்பை எவ்வாறு அடைவது மற்றும் வருமானத்தை எவ்வாறு விரிவுபடுத்துவது போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் வெற்றியின் அடிப்படையில் அடுத்த மாகாண தகவல் தொழில்நுட்ப மாநாடு, ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலியில் நடைபெறவுள்ளதுடன், மேலதிக தகவல்களை charithk@icta.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!