அகமதாபாத் விமான விபத்து: விமானத்தில் இருந்த யாரும் பிழைக்கவில்லை
விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததுடன், அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் யாரும் உயிர்பிழைத்ததாகத் தெரியவில்லை என்று அந்நகரத்தின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் உள்ளூர் மக்கள் சிலரும் உயிரிழந்ததாக அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.
விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்ததுடன், அதில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இன்று மதியம் விமானம் விபத்துக்குள்ளானது.