கிரிக்கெட் உலககோப்பையுடன் மீனா.. அடேங்கப்பா!
Cricket World Cup 2023: வரும் அக்டோபர் மாதம் உலக நாடுகள் மோதும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதனை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக கோப்பை 2023ஐ அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை மீனா.

Cricket World Cup 2023: வரும் அக்டோபர் மாதம் உலக நாடுகள் மோதும் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதனை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக கோப்பை 2023ஐ அறிமுகப்படுத்தி உள்ளார் நடிகை மீனா.
கணவர் வித்யாசாகர் மறைவுக்கு பிறகு பெரும் துயரில் ஆழ்ந்திருந்த நடிகை மீனாவுக்கு திரையுலகமே ஒன்று திரண்டு நிகழ்ச்சி நடத்தி உற்சாகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பையுடன் மீனா: குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் நடிகை மீனா இந்த வயதிலும் தொடர்ந்து முன்னணி நடிகையாகவும் சீனியர் நடிகையாகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், திடீரென உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரம்மாண்ட கோப்பையுடன் நடிகை மீனா நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
தனது இன்ஸ்டாகிராமில் அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ள நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
முதல் இந்திய நடிகர்
இதுவரை எந்தவொரு இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமைக்குரிய அங்கீகாரம் எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளேன் என்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள உலக அதிசயமான ஈஃபிள் டவருக்கு கீழே நின்று உலக கோப்பையை நடிகை மீனா அறிமுகப்படுத்தி உள்ளார்.
எங்கேயோ போயிட்டீங்க
நடிகை மீனாவுக்கும் உலக கோப்பைக்கும் என்ன சம்மந்தம் என ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்விகளை எழுப்பியும், நீங்க எங்கேயோ போயிட்டீங்க மீனா மேடம் என கமெண்ட்டுகளை போட்டு வாழ்த்தியும் வருகின்றனர்.
சினிமாவிலும் மீண்டும் செம கம்பேக் கொடுத்து கலக்க வேண்டும் என ரசிகர்கள் நடிகை மீனாவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.