தேங்காய் எண்ணெய் விலை திடீரென அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

ஜுன் 17, 2024 - 16:54
தேங்காய் எண்ணெய் விலை திடீரென அதிகரிப்பு

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 180 ரூபாய் தொடக்கம், 200 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யின் தற்போதைய சில்லறை விலை 550  ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கொழும்பு வெள்ளவத்தையில் இன்று (17) ஒரு லீற்றர் தேங்காய் எண்ணையின் விலை 750 ரூபாயாக விற்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!