வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!
திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி, சில வகை வாகனங்களை இந்த வருடத்தின், மூன்றாவது மற்றும் நான்காம் காலாண்டுகளில் இறக்குமதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கும், நான்காம் காலாண்டில், வர்த்தக வாகனங்கள் மற்றும் பிற வகை வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அரசாங்கத்தின் முன்மொழிவுகள் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.