எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கான வேட்புமனுக்களை மீண்டும் பெறுவது தொடர்பான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை நேற்று (20) பிற்பகல் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“உள்ளாட்சி தேர்தலை மார்ச் 2023ல் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டன. ஆனால் அப்போது இருந்த கட்சிகள் இன்று இல்லை. சில கூட்டணிகள் உடைந்துள்ளன. எனவே அந்த வேட்புமனுவை இரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை கோர வேண்டும் என்று நினைக்கிறோம்.
எனவே, அண்மையில் அமைச்சரவையில் முடிவெடுத்து தற்போது அதனை இரத்து செய்வது தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டு உள்ளது அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டு வருகிறது" என்றார்.
இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் பல பிரச்சினைகளுக்குள் சிக்கித் தவிப்பதாகவும், அதனால்தான் அடுத்த வருடத்துக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.