“ஸ்கைப்” ஊடாக “ஹரக் கட்டா”வழக்கினை விசாரிக்க கோரிக்கை
ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை “ஸ்கைப்” ஊடாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை “ஸ்கைப்” ஊடாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்பான தமது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்று அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஸ்கைப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசத் தரப்பினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்ச் 17 ஆம் திகதி எதிர்த்தரப்பு சட்டரத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.