சிறிய ஸ்ரீ பாதையில் இருந்து விழுந்த பிரித்தானிய பிரஜை
எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13) காலை 100 அடி பாறையிலிருந்து வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்துள்ளார்.

எல்ல சுற்றுலா வலயத்திற்குட்பட்ட சிறிய ஸ்ரீபாத மலையிலிருந்து ஞாயிறுக்கிழமை (13) காலை 100 அடி பாறையிலிருந்து வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, சுற்றுலாப் பொலிஸார் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்டு தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பண்டாரவளை பொலிஸார் கூறினர்.
பிரித்தானியப் பிரஜையான 27 வயதுடைய வெளிநாட்டவர் சிறிய ஸ்ரீ பாத மலையில் இருந்து சூரிய உதயத்தின் வீடியோ காட்சிகளையும் புகைப்படங்களையும் தனது அலைபேசியில் படம்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
கீழே விழுந்ததில் அவரது ஒரு காலில் மாத்திரம் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.