இலங்கையில் இன்றைய  தங்க விலை இவ்வளவா?

இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,716 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

Dec 13, 2022 - 11:24
இலங்கையில் இன்றைய  தங்க விலை இவ்வளவா?

இலங்கையில் இன்றைய  தங்க விலை


இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,716 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,650 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 160,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.   

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்