கண்டி நகருக்குள் நுழைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 24, 2025 - 15:53
கண்டி நகருக்குள் நுழைபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஸ்ரீ தலதா மாளிகையில் புனித சின்னத்தை வழிபட கண்டிக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அனைத்து பக்தர்களும் மறு அறிவிப்பு வரும் வரை நகரத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித சின்னத்தின் சிறப்பு கண்காட்சியான 'சிறி தலதா வந்தனாவ'விற்கு ஏராளமான மக்கள் வருகை தருவதால், கண்டி பிரதேச செயலாளர் பக்தர்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நிகழ்வு இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் இருந்ததால், இன்றும் நாளையும் கண்டிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் நேற்று பக்தர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

'சிறி தலதா வந்தனாவ' ஏப்ரல் 18 ஆம் திகதி ஜனாதிபதியால் உத்தியோகப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டதுடன் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. (நியூஸ்21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!