பெரகல - வெல்லவாய வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது

பெரகல - வெல்லவாய வீதியின் விகாரகல பிரதேசத்தில் (184km) மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், எல்ல-வெல்லவாய வீதியை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்த முடியும் என்றும் பதுளை மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (19) அதிகாலை பதிவாகியதுடன், மண்சரிவு காரணமாக வீதி போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
தடைப்பட்டுள்ள வீதியில் உள்ள மண்ணை அகற்றுமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.