தாய்ப்பால் புரைக்கேறி 13 நாட்களே ஆன பெண் சிசு மரணம்

சிசுவின் தாயாரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், அவர் சற்று மனநல அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Jan 24, 2024 - 09:41
தாய்ப்பால் புரைக்கேறி 13 நாட்களே ஆன பெண் சிசு மரணம்

மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி, 13  நாட்களே ஆன பெண் சிசு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் துயர சம்பவம், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் அனோஜினி என்ற பெண் சிசுவே உயிரிழந்துள்ளது.

சிசுவின் தாயாரிடம் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார், அவர் சற்று மனநல அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

சிசுவின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, சட்ட வைத்திய அறிக்கையில் தாய்ப்பால் புரைக்கேறி சிசு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...