96வீத சிறுவர்கள் பல் நோயால் பாதிப்பு - விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இலங்கையில் 5 வயது பூர்த்தியடைந்த 96% சிறுவர்கள் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் 5 வயது பூர்த்தியடைந்த 96% சிறுவர்கள் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
15 வயதை எட்டிய சிறுவர்களில் 85% பேர் பல் நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக அரச பல் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் மஞ்சுளா ஹேரத் தெரிவித்தார்.
12 வயது நிறைவடைந்த 79% சிறுவர்களுக்கு பல் நோய் உள்ளது.
அத்துடன், கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களிடையே பல் நோய்கள் அதிகம் பதிவாகி வருவதாக விசேட வைத்தியர் டாக்டர் மஞ்சுளா ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, குழந்தைகளின் வாய் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.