நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 74,499 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதிகளவான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் 39,900 ஆண் தொழிலாளர்களும் 34,599 பெண்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதயும் பாருங்க: இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது - தேர்தல் ஆணைக்குழு
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இலங்கையர்கள் தொழில் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.
கடந்த 3 மாதங்களில் தென் கொரியாவுக்கு 2,374 பேரும், இஸ்ரேலுக்கு 2,114 பேரும், ருமேனியாவுக்கு 1,899 பேரும் ஜப்பானுக்கு 1,947 பேரும் சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.