இம்மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுபனவு
அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்கப்படும்

வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்ட 10,000 ரூபாய் கொடுப்பனவில் இம்மாதம் முதல் 5,000 ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வரி இலக்கத்தை மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொடுக்க புதிய திட்டம்
இதேவேளை, தைப்பொங்கல் பண்டிகையின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவு நிதி நிவாரணம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(05) யாழில் வைத்து கூறி இருந்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதுடன் அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சொல்லி இருந்தமை குறிப்பிடத்தக்கது.