வரி இலக்கத்தை மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொடுக்க புதிய திட்டம்
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
"உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள இலக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் TIN இலக்கத்தைப் பெறலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அதனை இலகுவாக்க பிரதேச செயலகங்கள் மூலம் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த நடைமுறை திங்கட்கிழமை முதல் விரைவில் செயற்படுத்தப்படும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வரி செலுத்துவதில் சுமை இல்லை. மாத வருமானம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.