24 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு மு.கா. ஸ்டாலின் கடிதம்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Nov 29, 2022 - 10:43
24 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு  மு.கா. ஸ்டாலின் கடிதம்

24 இந்திய மீனவர்கள் கைது

நேற்றைய தினம்(28) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலின், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 221 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மீனவ சமூகத்திற்கு அரசின் ஆதரவு தேவைப்படுவதாகவும் முதல்வரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்