மொனிக் ஊழியர்களை பாராட்டும் "2024 மொனிக் லெகசி விருதுகள்"
முன்னணி நுண்-நிதி நிறுவனங்களில் ஒன்றான மொனிக், 2024 ஆம் ஆண்டிற்கான தனது ஊழியர்களை பாராட்டும் விழாவை அண்மையில் குருநாகல் எபிடோம் ஹோட்டலில் நடத்தியது.

முன்னணி நுண்-நிதி நிறுவனங்களில் ஒன்றான மொனிக், 2024 ஆம் ஆண்டிற்கான தனது ஊழியர்களை பாராட்டும் விழாவை அண்மையில் குருநாகல் எபிடோம் ஹோட்டலில் நடத்தியது.
தேசிய வீடமைப்பு ஆணையாளரும் எல்.சி.பி. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா,எல்.சி.பி. பைனான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.ஜி. லீலாநந்த மற்றும் மொனிக் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி வாசல மதுவந்த ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதான அதிதிகளாக கலந்த்துகொண்டனர்.
தமது நிறுவனம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக பயணிப்பதற்கு தமது நிறுவன ஊழியர்கள் தவறாது பங்களிப்பை வழங்கியதாக மொனிக் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மதுவந்த வாசல ஆரியபால இதன்போது தெரிவித்தார். இதன்போது விற்பனை இலக்கை வெற்றிகரமாக எட்டிய அதிகாரிகளுக்கு வாகனங்கள் உட்பட பெறுமதியான பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
மொனிக் குழுமமானது, வீட்டுக் கடன், கட்டுமான நிதி, தங்கக் கடன், வாகனக் கடன், வணிகக் கடன் மற்றும் நுண்கடன் உட்பட அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் அபிலாஷைகள் மற்றும் கனவுகளை மேம்படுத்துவற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.