10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

ஜனாதிபதி, பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மே 20, 2022 - 12:14
10 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, டிரான் அலஸ், ஜீவன் தொண்டமான், ஹரீன் பெர்னாண்டோ மனுஷ நாணயக்கார இன்று அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார்.

சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்ஷவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிரான் அலசும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 25 இராஜாங்க அமைச்சர்கள் பின்னர் நியமனம் பெறுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!