10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாடாளுமன்றத்தில் நேற்று (29) வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த வருடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்து அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (29) வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த வடகொரியா ஜனாதிபதியின் சகோதரி
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினால், அடுத்த வருடம் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டு கட்டணம் அதிகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மாணவர்களே பாதிக்கப்பட போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.