அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த வடகொரியா ஜனாதிபதியின் சகோதரி

கிம் ஜாங் உன்னின் சசோதரி கிம் யோ ஜாங் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.

நவம்பர் 30, 2023 - 15:04
அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்த வடகொரியா ஜனாதிபதியின் சகோதரி

வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சசோதரி கிம் யோ ஜாங். இவர் வடகொரியாவின் அதிகாரமிக்க தலைவராக உள்ளார். 

அண்மையில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்தி அதன்மூலம் வெள்ளை மாளிகை, பென்டகன் படத்தை பெற்றதாக தெரிவித்திருந்தது. இதனால் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. 

இதனையடுத்து கொரியா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை தென்கொரியா இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த நிலையில்தான் ராஜதந்திர அளவிலான உறவை மேம்படுத்திக்கொள்ள அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையும் படிங்க: 7 நாடுகளுக்கு இலவச வீசா... உடனடியாக அமுல்! எவ்வாறு பெறுவது?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின்போது, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-க்ரீன் பீல்டு  "எந்தவித நிபந்தனை இல்லாமமல் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், நேரத்தையும் பேசக்கூடிய கருத்தையும் வடகொரியாவே முடிவு செய்து கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யொ ஜாங் அமெரிக்காவின் அழைப்பை நிராகரித்துள்ளதுடன், செயற்கைக்கோள் மூலம் மிரட்டல், மற்ற ஆயுதங்களை செயல்படுத்துதல் போன்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

மேலும், "ஒரு சுதந்திர அரசின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியாது. எனவே, வடகொரியா அந்த நோக்கத்திற்காக ஒருபோதும் அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது." என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!