வரதட்சணை கொடுமை - கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்

கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாத கர்ப்பிணி மனைவியை மோகன்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

வரதட்சணை கொடுமை -  கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்

வரதட்சணை கொடுமை 

இந்தியாவின் கர்நாடாகவில், வரதட்சணைக்காக ஆறு மாத கர்ப்பிணி மனைவியை கொன்று புதைத்துவிட்டு ஓடி விட்டதாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.

கங்ககொண்டனஹல்லி கிராமத்தைச் மோகன்குமார்- சந்திரகலா தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. பால் வியாபாரம் செய்துவரும் சந்திரகலாவின் தந்தை, தனது மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தியுள்ளார்.

வரதட்சணை தொடர்பாக இரு வீட்டார் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை கேட்டு உணவு, மருந்து கொடுக்காமல் 6 மாத கர்ப்பிணி மனைவியை மோகன்குமார் குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

இக்கொடுமையை தனது சகோதரியுடன் பகிர்ந்து கொண்டதால், ஆத்திரத்தில் மோகன்குமார் மனைவியை கொலை செய்து காட்டில் புதைத்துள்ளான்.