பணிப்புறக்கணிப்பு: வெறிச்சோடிய வைத்தியசாலைகள்.

வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

மார்ச் 13, 2023 - 17:05
மார்ச் 13, 2023 - 17:11
பணிப்புறக்கணிப்பு: வெறிச்சோடிய வைத்தியசாலைகள்.

(அந்துவன்)

 அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கை மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (13) காலை 8 மணிமுதல் (14) காலை 8 மணிவரை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை மற்றும் பொகவந்தலாவை, மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய வைத்தியசாலைகளும் வெறிச்சோடியிருந்தன.

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அறிந்த பெருந்தொகையான நோயாளர்கள் முன்கூட்டியே வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட அதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பை அறியாத நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதையும் காணக்கூடியதாக இருந்தது.

வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு, வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!